வெயில் காலத்தில் ஜில்லுனு சில டிப்ஸ்..!

வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர் தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பதே பெஸ்ட்.


* இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

* வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.

* டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக் கூந்தலையும் மூடிச் செல்லவும்.

* உருளைக் கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

* இட்லி, அவியல், கூட்டு, ரெய்த்தா போன்று விரைவில் தயாரிக்கக் கூடிய உணவுகளை சமையுங்கள்.

எல்லா வற்றிற்கும் மேலாக, காலையில் வழக்கத்தை விட விரைவாக எழுந்து, சூரியன் ‘ஹாய்’ சொல்வதற்குள் சமையலறை வெப்பத்தி லிருந்து வெளியே வந்து விடுங்கள்.


* உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

* இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* உடல் சூட்டைத் அதிகரிக்கக் கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரை க்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.
Tags:
Privacy and cookie settings