கருணாநிதிக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்.... மத்திய அரசு !

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி உள்ளிட்ட 3 பேரின் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
நாடு முழுவதும் என்.எஸ்.ஜி. எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பு மொத்தம் 15 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானியும் அடக்கம். 

இந்த தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனம், 2 பாதுகாப்பு வாகனங்கள், 40 பாதுகாப்பு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இதேபோல் இசட் பிலஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் என பல பிரிவுகளில் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு வழங்கப்படும் தலைவர்கள் எண்ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசிடம் கமாண்டோ படைப் பிரிவினர் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. 

இது குறித்து ஆலோசித்த உள்துறை அமைச்சகம் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ், அஸ்ஸாம் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்கள் தருண்கோகய், 

லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க முடிவு செய்துள்ளது. இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings