உடலுறவுக்கு மறுத்த கணவனைக் கட்டையால் அடித்து கொலை செய்த மனைவிக்கு குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத் நகர அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
அகமதாபாத் சாரதாநகரில் வசிப்பவர் விமலா வகீலா (54). அவரது கணவன், நர்சிங். இவ்விருவரை தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை.
2013, நவம்பர் 2ம் தேதியன்று, மதிய நேரத்தில், விரக தாபத்தில் கணவனை உடலுறவுக்கு அழைத்துள்ளார் விமலா வகீலா. ஆனால், நர்சிங்கிற்கோ, அதில் நாட்டமில்லையாம். இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கேட்டு உதாசீணப்படுத்தி விட்டார்.
காம வெறியில் இருந்த விமலா வகீலாவால் இந்த புறக்கணிப்பை பொறத்துக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஆண்மையே இல்லை என்று கணவனை சீண்டி சிரித்துள்ளார்.
அப்படியும், நர்சிங் அசைந்து கொடுக்காததால், வேறு பெண்ணோடு அவருக்கு தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், தன்னை திருப்திப்படுத்த முடியவில்லை என்றும் கூறி சண்டை போட்டுள்ளார்.
தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தனது கணவனின் தலையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த நர்சிங், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின்னர், காவல்நிலையம் சென்ற விமலா, தனது கணவரை யாரோ அடித்து கொலை செய்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் போலீஸ் விசாரணையில், விமலாதான் தனது கணவரை கொன்றார் என்பது தெரிய வந்தது இந்த விவகாரத்தில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், விமலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி பட் தீர்ப்பளித்தார்.
இந்த அபராதத்தை கட்ட தவறினால், மேலும் ஆறு மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.