கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் கருப்பு பெட்டி !

66 பேருடன் மத்திய தரைக்கடலில் விழுந்து மூழ்கிய எகிப்து ஏர் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டியை மீட்கப்பட்டிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 
கடந்த மாதம் 18ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 66 பேருடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புறப்பட்ட எகிப்துஏர் விமானம் ராடாரில் இருந்து மாயமானது.

பின்னர் விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

விமானம் கடலில் விழும் முன்பு வெடித்துச் சிதறியதாகவும் கூறப்பட்டது. இது தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும் 

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மத்திய தரைக்கடலில் உள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த தேடல் பணியில் எகிப்து, கிரீஸ், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய இந்த கருப்பு பெட்டி உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings