வெளிநாட்டு உரிமையில் அஜீத்தை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன் !

படங்களின் வெளிநாட்டு விற்பனை உரிமையில் அஜீத்தை விட சிவகார்த்திகேயனே முன்னணியில் இருப்பதாக, ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது. 
வெளிநாட்டு உரிமையில் அஜீத்தை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன் !
திரைப்படத் துறையில் 25 ஆண்டுகளாக இருக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு விலை போகின்றன என்ற விவரத்தை வெளியிட்டிருக்கிறது. 

இதில் 30 கோடிகளுடன் ரஜினி முதலிடத்தையும் 22 கோடிகளுடன் விஜய் 2 வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். சூர்யா 20 கோடிகளுடன் 3 வது இடத்தையும், கமல் 15 கோடிகளுடன் 4 வது இடத்திலும் இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் 10 கோடிகளுடன் 5 வது இடத்திலும், அஜீத் 8 கோடிகளுடன் 6 வது இடத்திலும் இருக்கிறார். 

7 கோடிகளுடன் விக்ரம் இந்தப் பட்டியலில் 7 வது இடத்தையும் 6 கோடிகளுடன் சிம்பு கடைசி இடத்திலும் இருக்கிறார். 
விஜய்க்கு போட்டியாக பார்க்கப்படும் அஜீத் இந்தப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

அஜீத், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் வெளிநாட்டு வியாபாரத்தை விட, சிவகார்த்திகேயனின் வெளிநாட்டு உரிமை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இதனை வைத்து அஜீத்-விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings