தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார். ரமலான் மாதத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
பிறை தெரிவதை அடுத்து ரமலான் மாதம் தொடங்கும். இந்நிலையில், ரமலான் மாதம் தொடங்குவதற்கான பிறை தெரிந்ததைத் தொடர்ந்து நாளை முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
திங்கள்கிழமை மாலை நாகப்பட்டிணம், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வானில் பிறைநிலா தென்பட்டது.
இதையடுத்து, ரமலான் மாதம் தொடங்குவதாகவும், இஸ்லாமிய மக்கள் நோன்புக்கு தயாராக வேண்டும் எனவும் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் நேற்று இரவு பிறை தெரிந்ததால் நேற்றுடன் ஷாபான் மாதம் முடிந்து இன்று ரமலான் மாதம் துவங்கியுள்ளது.