சீனாவில் மட்டும் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும். தென்சீனாவில் 12 வயது பள்ளி மாணவியின் பின் மண்டையில் கத்தி ஒன்று ஏறியுள்ளது.
நிஞ்சாக்கள் பாவிக்கும் இக் கத்தி வழமையாக ஒருவரை தாக்க எறியப் பயன்படுகிறது. இதனை பள்ளி மாணவன் ஒருவன் கொண்டுவந்து மாணவி ஒருவருக்கு எறிந்துள்ளார்.
அது வேகமாக வந்து மாணவியின் பின் மண்டையை பதம்பார்த்துள்ளது. ஆனால் இதில் அதிஷ்டவசமாக இச் சிறுமி உயிர்பிழைத்துள்ளார் என்பது பெரிய விடையம்.
உடனடியாக சத்திர சிகிச்சை செய்த மருத்துவர்கள், கத்தியை வெளியே எடுத்துவிட்டார்கள். குறித்த கத்தி மூளையைப் பாதிக்கவில்லை என்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஸ்கேனிங் செய்து பார்த்த வைத்தியர்கள், பின்னர் சத்திர சிகிச்சையை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.