பணம் பணம்னு கேட்டீங்க கட்சியை கலைச்சுடுவேன்.. விஜயகாந்த் !

கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டு நச்சரித்தால் கட்சியையே கலைக்கவும் தயங்கமாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து 104 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

மேலும் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தாராம். ஆனாலும் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கவில்லையாம்.

தேர்தல் தோல்விக்குப் பிறகும் விஜயகாந்திடம் நிர்வாகிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ய கடந்த 5-ந் தேதி பணம் தரப்படும் எனக் கூறினார். இருந்தபோதும் சிலருக்குத்தான் இந்த பணம் கிடைத்திருக்கிறது.
தற்போது விஜயகாந்த் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருமே, விஜயகாந்திடம் பணத்தை தாங்க.. ரொம்ப சிரமமாக இருக்கிறது என கெஞ்சியிருக்கின்றனர். 

ஆனால் விஜயகாந்தோ, என்னங்க கடன்காரர் மாதிரி பணத்தை கேட்கிறீங்க? என எகிறியிருக்கிறார். இந்த கோபத்தின் உச்சத்தில், இப்படியே பணம்...பணம்னு கேட்டுகிட்டே இருந்தீங்க... 

கட்சியையே கலைச்சுட்டுப் போகவும் நான் தயங்கமாட்டேன்... யாருகிட்ட? என மிரட்டியிருக்கிறார். இதனால் என்னதான் செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி போய் நிற்கிறார்கள் தேமுதிகவினர்.
Tags:
Privacy and cookie settings