நடுரோட்டில் தன்னை அடித்து விட்டதாக நடிகர் சூர்யா மீது இளைஞர் போலீசில் புகார் கொடுத்து விட்டு, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற்றார் அல்லவா...
அவர் திரும்பப் பெற்றதன் பின்னணி இப்போது தெரிய வந்துள்ளது. தான் யாரையும் அடிக்கவில்லை என்று சூர்யா விளக்கம் அளித்தாலும், தொடர்ந்து சூர்யா அடித்ததாகவும்,
அதனால் தான் மயங்கி விழுந்து விட்டதாகவும் அந்த இளைஞர் (பிரேம் குமார்) தொடர்ந்து கூறி வந்தார்.
இதில் லோக்கல் பிரமுகர்கள் தலையீடு அதிகரித்ததால் போலீசாரும் புகார் மனுவை ஏற்று ரசீது கொடுத்திருந்தனர்.சூர்யா நேரில் வர வேண்டும்.
அவர் வரும் வரை விட மாட்டேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார் பிரேம் குமார். இந்த நிலையில் தான் திடீரென நேற்று மாலை புகாரை வாபஸ் பெறுவதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்.
இதன் பின்னணியில் ஒரு சமரசப் பேச்சு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இளைஞர் பிரேம் குமாரை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்த சூர்யாவின் தந்தை சிவகுமார், வக்கீல் முன்னிலையில் சமரசப் பேச்சு நடத்தினாராம்.
அதன் பிறகே பிரேம்குமார் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டாராம். கடைசியில் காக்கா முட்டை கதையாகிடுச்சே!