தற்கொலைக்கு முயலும் நபரின் மனதை மாற்றிய முகமது அலி !

1 minute read
உலகம் முழுவதிலும் உள்ள குத்துச்சண்டை ரசிகர்களை உலுக்கியுள்ளது முகமது அலியின் மரணம். களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், மூன்று முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்றவர்.
தனது ஆக்ரோஷமான நாக் அவுட் முறை குத்துக்களால் எதிரியை நிலைகுலைய வைத்த முகமது அலி, மரணத்தை நோக்கி பயணித்த நபரின் உயிரை தனது அன்பான பேச்சால் மாற்றியுள்ளார், அந்த அளவுக்கு அவர் இரக்க மனம் கொண்டவர்.

1981 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வழியாக சென்றுகொண்டிருந்தபோது, நபர் ஒருவர் கட்டிடத்தின் 9 வது மாடியில் உள்ள ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டு, தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

இதனை அறிந்த முகமது அலி, வேகமாக மேலே ஏறி சென்று, மற்ற ஜன்னலின் பக்கமாக நின்றுகொண்டு, தற்கொலை செய்துகொள்ளாதே, நீ என்னுடைய சகோதரன் ஆவாய்.

நீ வாழும் வாழ்க்கை மதிப்பானது, அப்படி நீ தற்கொலை செய்துகொண்டால் நரகத்துக்கு தான் செல்வாய், உனது முடிவை மாற்றிக்கொள் என அறிவுரை கூறியுள்ளார்.
இதனை கேட்ட அந்நபரும் தனது முடிவை மாற்றக்கொண்டார், அந்நபருக்கு அருகில் சென்று ஜன்னல் வழியாக அவர் பத்திரமாக வீட்டிற்குள் செல்வதற்கு உதவியுள்ளார்.
Tags:
Today | 3, April 2025
Privacy and cookie settings