தொழில்நுட்பங்கள் என்பது நம் வாழ்வில் இணைந்து போனது உண்மை தான். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனிதனின் வசதிக்காகவும், தேவைக்காகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் சிலர் இந்த தொழில்நுட்பத்தின் தேவைகளை தவறாகவும் பயன்படுத்து கின்றனர். அந்த வகையில் நமது மொபைல் ரீசார்ஜ் செய்வது இப்போது EC Recharge என்ற முறையில் எளிதானதாக உள்ளது.
இந்த வசதிமூலம் நமது செல் எண்களை கொடுத்த வுடன் அந்த நம்பருக்கு வேண்டிய Recharge தொகையை கடைக்காரரின் செல்வழியாக நமக்கு வந்து விடும்.
நமக்கு எந்த வேலையும் இல்லை கார்டை வாங்கி, சுரண்டி விட்டு பின் நம்பரை போட்டு பணம் ஏற்ற வேண்டும் எந்த கவலையும் இல்லை.
Ec Recharge ல் நாம் கொடுக்கும் நம்பர் ஆனது தொடர்ந்து ஒரு நோட்டில் குறிக்கப்படுகின்றது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமா கின்றது. நமது நம்பர் அங்கே வேறொருவரால் திருடப்படலாம்.
இதனால் நமக்கு தவறான கால்கள், SMS கள் வர வாய்ப்புண்டு. நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு நம் நம்பரை பெற இது ஒரு பெரிய வாய்ப்பு.
சில சமயம் கடைக்காரர்களே இந்த தவறான செயலை செய்கின்றனர். ஆக மொத்தம் இந்த EC Recharge என்பது பெண்களுக்கு பாதிப்பை தரக்கூடியது. இது பாதுகாப்பை தராது.
இதை தவிர்க்க வாடிக்கையான கடைகளிடம் மட்டுமே செல்ல வேண்டும். அதே சமயம் சில கடைகளில் வாடிக்கையாளர்களே தங்கள் மொபைல் நம்பரை அவர்கள் கையாலே செல்போனில் டயல் செய்கின்றனர்.
இதுவும் நல்லது தான். என்ன தான் இருந்தாலும் ஒரே அடியாக TOP UP Recharge கார்டுகளை ஏற்றிக் கொண்டால் அடிக்கடி செல்லத் தேவை யில்லை.
இவ்வளவு நாள் அஜாக்கிரதை யாக இருந்தால் இன்றிலிருந்து ஜாக்கிரதை யாக இருக்கவும்.
இதுவும் நல்லது தான். என்ன தான் இருந்தாலும் ஒரே அடியாக TOP UP Recharge கார்டுகளை ஏற்றிக் கொண்டால் அடிக்கடி செல்லத் தேவை யில்லை.
இவ்வளவு நாள் அஜாக்கிரதை யாக இருந்தால் இன்றிலிருந்து ஜாக்கிரதை யாக இருக்கவும்.