மலேசிய விமானம் கடுமையாக குலுங்கியதால் பரபரப்பு !

0 minute read
லண்டனிலிருந்து மலேசிய கோலாலம்பூருக்கு 378 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பயணித்த மலேசிய எயார்லைன்ஸ் 
விமானத்தில் கடும் குலுக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்வவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த எயார் பஸ் ஏ380. எம்.எச்.1 விமானம் வங்காள விரிகுடாவிற்கு மேலாக பறக்கையில் குறுகிய நேரத்துக்கு இவ்வாறு கடுமையாக குலுங்கியதாக அந்த விமானசேவை நிறுவனம் கூறுகிறது.

தொடர்ந்து மேற்படி விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 

இந்நிலையில் மேற்படி விமானத்தில் பயணித்து காயமடைந்த பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமான நிலையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இந்த சம்பவத்தில் சுமார் 34 பேர் காயமடைந்துள்ளதாக மலேசியாவிலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 வீடியோ பாருங்கள்.......!
எனினும் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
Today | 15, March 2025
Privacy and cookie settings