ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஆசிரியர் பணியிடை நீக்கம் !

1 minute read
ஆந்திர மாநிலத்தில் உள்ள எகபாதம் பகுதியில் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில கல்விதுறை முதன்மை செயலாளார் உத்தரவிட்டார். 
கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சர்தார் பாபு என்ற ஆங்கில் ஆசிரியர் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தி கொண்டிருந்தார். திடீரென வகுப்புக்குள் சென்ற முதன்மை செயலாளர், பாடத்தை நிறுத்த வேண்டாம் என கூறி 

தொடர்ந்து பாடம் நடத்தும்படி ஆசிரியர் சர்தார் பாபுவை கேட்டுக்கொண்டார். ஆனால் சர்தார் பாபு ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்காமல் பாடம் நடத்தினார்.

இதைக் கண்டு முதன்மை செயலாளர் சிசோடியா கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆசிரியர் சர்தார் பாபுவிடம் ஆங்கிலத்தில் உரையாடினார். 

பதில் அளிக்க முடியாமல் ஆசிரியர் திக்குமுக்காடி போனார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிசோடியா, ஆசிரியர் சர்தார்பாபுவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Tags:
Today | 31, March 2025
Privacy and cookie settings