இங்கிலாந்து அரசு அண்மைக்காலமாக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு பல்வேறு மானியங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டின்
ஆக்ஸ்போர்ட்ஷிர் பகுதியில் செயல்படும் 44 சிறுவர்கள் மையத்தை மூட முடிவு செய்தது. ஆனால், இவற்றை அரசு மூடுவதற்கு திட்டமிட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கோரிக்கை மனுவில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் 81 வயதான தாயர் மேரி கேமரூன் மற்றும் அவரது சகோதரி கிளேர் குர்ரே ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
ஓய்வு பெற்ற மாஜிஸ்திரேட்டான கேமரூனின் தாயார், நல்லெண்ண அடிப்படையில் சம்பளம் பெறாமல் வாரத்திற்கு சில மணி நேரங்கள் அங்கு பணி புரிகிறார்.
இந்த சிறுவர் மையம் மூடபடுவதாக வந்த செய்தி என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. ஆனால், போதுமான பணம் இல்லை என்றால் இது போன்ற விஷயங்கள் நடந்துதான் ஆக வேண்டும் என்றார்.
அரசு மானியம் வழங்குவதை நிறுத்துவது பற்றி உங்கள் மகனிடம் பேசினீர்களா? என்று மேரியிடம் கேட்ட போது, நான் பேசவில்லை.
இது போன்ற நிர்வாக விவகாரத்தில் நான் தலையீடுவது கிடையாது. நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால்,இதற்கு உதவி செய்யுங்கள். அது மிகப்பெரும் விஷயமாக இருக்கும் “ என தெரிவித்தார்.
இங்கிலாந்தில் தற்போது 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் மையங்கள் உள்ளன.இந்த மையங்கள் மூலம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைந்து வருகின்றன.
கடந்த 2010- ஆம் ஆண்டில் கன்சேர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று கேமரூன் பிரதமர் ஆனதில் இருந்து, அங்கு 631க்கும் மேற்பட்ட மையங்கள் மூடப்பட்டுள்ளன.