மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெடில் அறிவித்த ஆன்லைன் விளம்பர சேவைக்கான புதிய சரிநிகராக்க வரி (equalization levy) ஜூன் 1 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இப்புதிய சரிநிகராக்க வரி ஜூன் 1ஆம் தேதி முதல் அதாவது இன்று நடைமுறை படுத்தபட்டது. சந்தையில் இந்தச் சரிநிகராக்க வரியை கூகிள் டாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
அன்லைன் விளம்பர சேவை அளிப்பதன் மூலம் கூகிள், டிவிட்டர், பேஸ்புக் போன்ற பல நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து மிகப்பெரிய வருமானத்தைப் பெறுகிறது.
இதனை முறைப்படுத்தவும், விளம்பர வருவாய்க்குப் பெறப்படும் வருமானத்திற்கு முறையான வரியைப் பெரு நிறுவனங்களிடம் இருந்து வசூல் செய்யவே இப்புதிய சரிநிகராக்க வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சரி வாங்க இந்த வரியைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம். மத்திய அரசின் புதிய 'கூகிள் டாக்ஸ்' நடைமுறைக்கு வந்தது..!
இந்திய நிறுவனம் அல்லாத பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆன்லைன் அல்லது இணையதள விளம்பர சேவைக்காக இந்தியா நிறுவனங்கள் செலுத்தப்படும்
தொகை வருடத்திற்கு 1 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் மொத்த தொகைக்கு 6 சதவீத வரியை மத்திய அரசுக்கு இந்திய நிறுவனம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் பன்னாட்டு நிறுவன தனது விளம்பர வருவாயை இழக்கக் கூடாது என்பதற்காக இந்திய சந்தையில் தனது நிறுவனத்தைப் பதிவிடும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
மேலும் இந்த 6 சதவீத வரியால் இந்தியாவில் இருக்கும் சிறு நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்பது வருத்தமான செய்தி.