பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டிய முதலுதவிகள் !

பாம்பு கடி – பற்றிய சில தகவல்கள் மற்றும் செய்ய வேண்டிய முதலுதவிகளும். 1 . கடித்த இடம் , மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப் படுகிறதா …. ? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல …
 



2 . கடித்த இடம் , இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா …. ? கடித்த இடம் சற்று தடித்து ( வீங்கி ) காணப்படுகிறதா .. ? கடுமையான வலி இருக்கிறதா .. ? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும் … 

முதலுதவி : - 

1 . இறுக்கி கட்டுப் போடவேண்டாம் . இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம் , சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும் . லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது . 

2 . காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும் .

3 . பாம்பு கடிபட்டவர் பதற்றமடைய கூடாது . அவர் பதற்றமடையும் போதும் ர த்த ஓட்டம் அதிகரிக்கும் . 

பாம்பு கடித்து விட்டால் வேகமாக நடக்க கூடாது . ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும் . அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவு படுத்துகிறது 
 



4 . இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளா னவரை தைரிய மூட்டவும் . எந்த அள விற்கு அவரின் இதயத் துடிப்பைக் கட்டுப் படுத்துகின்றோமோ , அவ்வளவிற்கு அவரைக் காப்பாறு கின்றோம் . 

5 . பாம்பு கொத்திய இடத்தை , இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும் . பாம்புக் கடிக்குள்ளான வரை படுக்க வைத்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்லவும்

6 .பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள் ளானவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லாதீர்கள் . ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவ மனையில் பாம்பு கடித்தோரை ” அட்மிட் ” செய்வதில்லை .

எனவே கால தாமதம் செய்யாமல் , உடன் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லவும் . 

7 . இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும் . சில சமயங்களில் அடித்துக் கொல்லக் கூடிய நிலை ஏற்படலாம் . எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால் , பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம் . 
 
ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம் . கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கிய மானவை . பாம்பு கடித்தால் .. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்க கூடும் . உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.
Tags:
Privacy and cookie settings