வீதிகளில் பாதசாரிகள் சிலர் தமது செல்போன்களை பார்த்துக்கொண்டே நடப்பதால், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை அவதானிக்கத் தவறுகின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இத்தகைய விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக, தரை மட்டத்திலேயே சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர அதிகாரிகள் தீர்மனித்துள்ளனர்.
ஸ்மார்ட் போன்களை பார்ப்பதற்காக கீழே குணிந்துகொண்டு செல்பர்களின் கண்களுக்கு தரையிலுள்ள சமிக்ஞை விளக்குகளாவது தென்படும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை.
பரீட்சார்த்த ரீதியில் இத்திட்டத்தை அமுல்படுத்துவற்காக 2,50,000 அவுஸ்திரேலிய டொலர்களை நியூ சௌத் வேல்ஸ் மாநில அரசாங்கம் செலவிட்டுள்ளது.
இவ்வருடம் வீதி விபததுகளால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் வீதி பாதுகாப்பு மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேர்னார்ட் கார்லோன் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், “வீதி விபத்துகளில் பாதசாரிகள் குறைந்தளவிலேயே பாதுகாக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் காயமடைவதற்கு அல்லது கொல்லப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால்தான் அவர்களை பாதுகாப்பதற்கு ஏற்ற வீதி பாதுகாப்பு முறைகளை அமுல்படுத்த வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.