ஏராளமான கார்கள் செல்லும் சாலையில் ஒரு புலி நடந்து சென்ற விவகாரம் வளைகுடா நாடான கத்தாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரின் தோஹா நகரில், ஏராளமான வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு வாகனத்தில் இருந்து கீழே குதித்த ஒரு புலி, சாலையில் செல்லும் வாகனங்களுக்கிடையே அங்கும் இங்கும் ஓடியது.
அதைக் கண்டதும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அந்த புலியை ஏராளமானோர் தங்கள் வாகனங்களின் உள்ளே இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அவைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக வளைகுடா நாடுகளில் உள்ள பெரும் பணக்காரர்கள், தங்களை அதிகாரம் மிக்கவர்களாக காட்டிக் கொள்வதற்காக, புலியை செல்லப் பிரணியாக வளர்த்து வருவது வழக்கம்.
இந்த புலியையும் அப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, வாகனத்தில் இருந்து அது கீழே குதித்திருக்கலாம் என தெரிகிறது.
அதன்பின் அந்த புலி, அதன் உரிமையாளர் மீட்டு கொண்டு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.