ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷின் தொடரி படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு ஜோடியாக அவரது 60வது படத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் ராமிற்கு ஜோடியாக நேனு சைலஜா படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தமிழில் அரை டஜன் படங்களை ஒத்துக் கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ், அப்படங்களை முடித்த பின்னரே தெலுங்கில் கவனம் செலுத்த முடியும் என பவன் கல்யாண் படத்தை தடாலடியாக மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் நானி நடிக்கும் தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சினிமா சூபிஸ்தா மாம படத்தின் இயக்குனர் திரிநந்த ராவ் இயக்கும் படத்தில் நானி நாயகனாக நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது.