நயன்தாரா வின் கொடி ரொம்ப உயரத்தில் பறக்க காரணம் என்ன என்று எங்கேயும் போய் ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த இருமுகன் பட ஸ்டில்லைப் பார்த்தாலே புரியும்.
கேரக்டருக் கேற்ற வகையில் மாறுவதும், பளிச்சென ரசிகர்களின் மனதுக்குள் மாறுவதுமே நயன்தா ராவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்க முடியும்.
இந்த வகையில் அவரது சரமாரி வெற்றிக ளுக்குக் காரணம் அவரது மெனக்கெட ல்களும் மெஸ்மரைஸ் செய்யும் அவரது ஸ்டைலுமே என்பதை சொல்லித் தெரிய வேண்டி யதில்லை.
இருமுகன் படத்தில் விக்ரமுடன் இணைந் துள்ளார் நயன்தாரா. கூடவே நித்யா மேனனும். அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலை யில், படக் குழு தற்போது ஒரு ரொமாண்டி க்கான ஸ்டில்லை வெளியிட் டுள்ளது. அதில், விக்ரம் மற்றும் நயன்தாரா இடம் பெற் றுள்ளனர்.
இந்தப் புகைப்பட த்தில் நடிப்பிற்காக அர்ப்பணி ப்புக்கு பேர் போன விக்ரம், வழக்கம் போல படு ஸ்டைலிஷாக, நீட்டாக காணப் படுகிறார்.
அவர் நயன்தாரா வின் மடியில் முகம் பதித்து கண்மூடி படுத்தி ருக்கிறார். அவரது முகத்தை வருடிய படி, தலைமுடி தலை கவிழ, முகம் விக்ரம் முகம் நோக்கி தணிந்திருக்க படு ரொமான்ட் டிக்கான லுக்கில் காணப் படுகிறார் நயன்தாரா.
அதை விட அவரது ஹேர் ஸ்டைலுக்கும் தான் பளிச்சென மனதை அள்ளுகிறது.
பார்.. முழுமையாக மாறி நிற்கும் நயன்தாரா வைப் பார் என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு அவ்வளவு அழகாக காட்சி தருகிறார் நயன்தாரா.
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் ஆனந்த் சங்கரும் நயன்தாரா வைப் பாராட்டி இருந்தார். இருமுகன் கேரக்டருக்கு வித்தியாச மான லுக் வேண்டும் என்றதும்,
இந்த நச்லுக்கில் வந்து அனை வரையும் ஆச்சர்யப் டுத்தி விட்டாராம் நயன். தான் நடிக்கும் கேரக்டருக் காக விக்ரம் எவ்வளவு அர்ப்பணி ப்போடு இருப் போரோ,
அதைப் போலவே தான் நயன் தாராவும் என அவர் பாராட்டி யுள்ளார். நிச்சயம் இந்த இருமுகன் ரொமான்டிக் ஸ்டில்லைப் பார்க்க நமக்கு பல முகம் தேவை என்பதில் சந்தேகம் இல்லை.