அட்டகாசம் செய்த குரங்கு கைது... மக்கள் நிம்மதி !

மும்பையின் மத்திய பகுதியில் 6 மாதமாக பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வந்த குரங்கு ஒன்றினை கைது செய்துள்ளனர். இதனால் பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
அட்டகாசம் செய்த குரங்கு கைது... மக்கள் நிம்மதி !
மும்பையின் மத்திய பகுதியில் கடந்த 6 மாதமாக சில குரங்குகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி, அலுவலகங்கள், பூங்கா மற்றும் 
உணவு விடுதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கு சிரமத்தை கொடுத்து வந்துள்ளது. மேலும் கடைகள், வீடுகளில் உணவை திருடி வந்துள்ளன. 

இதையடுத்து அந்த பகுதி மக்கள் அந்த குரங்குகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை கையாண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. 

சில நாட்களுக்கு முன்பு நகராட்சியிலும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அந்த குரங்குகளில் ஒன்று மட்டும் தனியாக வந்துள்ளது. 

அப்போது அப்பகுதி மக்கள் தொழில்முறை குரங்கு பிடிக்கும் நபரை வரவழைத்துள்ளனர். 

நீண்ட போராட்டத்திற்கு அந்த குரங்கை அந்த நபர் பிடித்துள்ளார். இதையடுத்து அந்த குரங்கின் கை, கால்களை கயிறால் கட்டி வைத்துள்ளனர்.
அந்த குரங்கு பிடிபட்டதுடன் அப்பகுதி மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்துள்ளனர். 
இதையடுத்து அந்த குரங்கின் கை மற்றும் கால்களை கழற்றி விட்டு கூண்டு ஒன்றுக்குள் அதனை அடைத்துள்ளனர். 

அந்த குரங்கு வடக்கு மும்பையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings