படதணிக்கை குழுவை கலைக்க வேண்டும்.. நந்திதாதாஸ் !

அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர், நந்திதாதாஸ். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘பயர்’ இந்தி படத்தில் லெஸ்பியனாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
படதணிக்கை குழுவை கலைக்க வேண்டும்.. நந்திதாதாஸ் !
இந்த படம் தணிக்கை குழுவின் அனுமதி பெறுவதில் பெரும் சர்ச்சை எழுந்தது. தற்போது தணிக்கை குழுவை கலைக்க வேண்டும் என்று நந்திதாதாஸ் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சினிமா படங்களுக்கு தணிக்கை குழுவில் சான்று பெறுவது சிரமமாக இருக்கிறது. ஒரு படத்தை உலகம் முழுவதும் 200 கோடி இந்தியர்கள் பார்க்கிறார்கள். 

அந்த படத்துக்கு என்ன சான்று அளிப்பது என்று தணிக்கை குழுவில் உள்ள 5 பேர் முடிவு செய்கிறார்கள். இது நியாயமாக தெரியவில்லை. 

எனக்கு பிடிக்கும் படம், இன்னொருவருக்கு பிடிப்பது இல்லை. மற்றவருக்கு பிடிக்கும் படத்தை நான் பார்ப்பது இல்லை. இப்படி விருப்பங்கள் மாறுபடுகிறது.
இந்த நிலையில் நல்ல படமா? இல்லையா? என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விடுவதே சிறந்தது. இணைய தளங்களில் எல்லாமே கிடைக்கிறது. எனவே தணிக்கை குழுவில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தணிக்கை குழுவுக்கு பதிலாக ‘ரேட்டிங்’ முறையை கொண்டு வரலாம். எது நல்ல படம், எது மோசமான படம் என்பதை தணிக்கை குழுவில் உள்ள 5 பேர் முடிவுசெய்வதற்கு பதிலாக மக்கள் முடிவுக்கு விட்டு விடலாம்.

திரைக்கு வந்த பல படங்களில் வன்முறை அதிகமாக உள்ளன. ஆபாசமான வசனங்கள் இடம்பெற்று உள்ளன. பெண்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த படங்களுக்கு எப்படி சான்று அளிக்கப்பட்டது என்று புரியவில்லை. தணிக்கை குழுவால் பயர், வாட்டர் போன்ற படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு அதனை வெளிக்கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டோம்.
எனவே தணிக்கை குழு தேவையில்லை. எந்த படத்தை பார்க்கலாம் எதை பார்க்க கூடாது என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விடவேண்டும். 

படத்தை ஒருவர் பார்த்து விட்டு நல்ல படம் இல்லை என்று சொன்னால் அந்த படத்தை பார்க்க யாரும் போக மாட்டார்கள்.

தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் எது சரி எது தவறு என்று தெரியும். தணிக்கை குழு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை.’’ இவ்வாறு நந்திதாதாஸ் கூறினார்.
Tags:
Privacy and cookie settings