ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவும் புதிய செயலி !

ஆபத்தில் இருப்பவர்கள் இருக்கும் இடத்துக்கு 5 நிமிடங்களில் போலீஸார் சென்று அவர்களைக் காப்பாற்ற புதிய செல்போன் செயலி தொழில்நுட்பத்தை மதுரை மாநகர காவல்துறையில் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். 
மதுரை மாநகர காவல்துறையில், ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய கடந்த ஆண்டு செல் போன் செயலி தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டது. 

ஆண்ட்ராய்டு போனில் இண்டர் நெட் இணைப்பு வசதி இருந்தால் காவல்துறையின் செல்போன் செயலி அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்தால் அதில் நகர காவல்நிலையங்கள் தொலைபேசி எண்கள்,

மாநகர ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் செல்போன் நம்பர்கள் மற்றும் போலீஸ் வாட்ஸ் அப் நம்பர்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைக்கும். 

ஆபத்து காலத்தில் பொதுமக்கள், இந்த வசதிகளை பயன்படுத்தி போலீஸாருக்கு தகவல் அளித்தால் ஆபத்தில் இருப்பவர்கள் இருக்கும் இடத்துக்கு போலீஸார் உடனே சென்று காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த செல்போன் செயலி தொழில்நுட்பத்திலேயே புதிய அப்ளிகேசனை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: முன்பிருந்த செல்போன் செயலி தொழில்நுட்பத்தில் ஆண்ட்ராய்டு போனில் இண்டர்நெட் வசதியிருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதனால், இண்டர்நெட் வசதியில்லாத இடங்களில் ஆபத்தில் இருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியாமல் இருந்தது. தற்போது இந்த புதிய அப்ளிகேசனை பதிவிறக்கும் செய்து கொண்டால் இண்டர்நெட் வசதியில்லா விட்டாலும், அதில் இருக்கும் 

எஸ்ஓஎஸ் என்ற குறியீட்டை அழுத்தினால் 5 நிமிடத்தில், அழைத்தவர்கள் இருப்பிடத்தை போலீஸார் கண்டுபிடித்து அங்கு வந்து காப்பாற்ற உதவி செய்வர்.

இந்த புதிய செல்போன் செயலியில் எஸ்ஓஎஸ் குறியீட்டை அழுத்தினால் இண்டர்நெட் இல்லாத இடங்களில் எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) ஆக போலீஸாருக்கு ஒன்றரை நிமிடத்தில் தகவல் சென்றுவிடும்.

வீடுகளில் தனிமையில் இருக்கும் பெண்கள், கல்லூரி, வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு தற்போது அறிமு கப்படுத்தப்பட்டுள்ள புதிய செல்போன் செயலி தொழில்நுட்பம் ஆபத்து காலத் தில் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்றார்.

பதிவிறக்கம் செய்ய...

இந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்ய கூகுள் ப்ளே ஸ்டாரில் சென்று மதுரை சிட்டி போலீஸ் என டைப் செய்தால் பெயர், இ-மெயில், செல்போன் நம்பர் கேட்கும். 

இதை குறிப்பிட்டு இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது தொடர்பான சந்தேகங்களுக்கு 0452-2346302 என்ற எண்ணில் மாநகர காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings