ஸ்மார்ட் போன்கள் நாள்தோறும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் 920 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்கப்பட்டவுள்ளதாக இத்துறையில் ஆய்வுசெய்யும் நிறுவனமான IDC தெரிவித்துள்ளது.
இதே விகிதம் வரும் 2017 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்களாக உயரும் என கருத்து தெரிவித்துள்ளது. இவ்வளவு வளர்ச்சி பெறுவதற்கு ஸ்மார்ட்போன்களில் உள்ள சிறப்பம்சங்களும், அவற்றின் நவீன தன்மையுமே காரணங்கள்.
இவை ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளதையும் மறுக்கமுடியாது. இன்டர்நெட் பயன்பாடு, பாடல்கள் மற்றும் படங்களை தரத்துடன் ரசிக்கவும் முடியும்.
துல்லியமாக புகைப்படம் எடுக்கலாம் என்பது போன்ற பல சிறப்புகல்கொண்ட ஸ்மார்ட்போன்களில் பின்வருவனவற்றையும் செய்யமுடியுமாம்.
டால்பி நிறுவனத்தின் ஒலியமைப்பான்களில் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த புதிய சிஸ்டத்தில் ஸ்மார்ட்போன் மூலம் இணைப்பை ஏற்படுத்தி திரையரங்கில் இருப்பதைப்போல் உணரமுடியும் என்கிறது டால்பி நிறுவனம்.
ஹெல்த்கேர் பகுதியிலும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் வந்துவிட்டதை மறுக்கமுடியாது. உங்கள் உடல் தொடர்பான விவரங்களை உங்களுடைய மருத்துவரின் கணினிகளுக்கு அனுப்பும் வியத்தகு தொழில்நுட்பங்களும் மேலைநாடுகளில் தலைதூக்கியே உள்ளது.
ஸ்மார்ட்போன் மூலமாக படுக்கையில் இருந்தவண்ணம் காபி கூட போடலாம். தொழில்நுட்பம் நம்மை நெருங்குகிறது.
குளிக்கும்போதும் போன் பேசலாம்.. தண்ணீரில் போட்டாலும் எதுவும் ஆகாத மாதிரியான ஸ்மார்ட்போன்கள் தயாராகிவிட்டன.
போன்களுக்கான மேலே பயன்படுத்தும் கேஸ்களை நாமே வடிவமைத்து அச்சிடவும் செய்யலாம்.
வாகனங்களை செலுத்தலாம். ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியே வாகனங்களைக் கூட கட்டுப்படுத்தும் வகையிலான தொளில்நுட்பம்கூட தயாராகிவருகிறது.