காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதாக சர்ச்சையில் சிக்கினார்.
இது பற்றி அம்மாநில அரசுகள் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளன.இந்த நிலையில் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி என்பவருக்கும், ராபர்ட் வதேராவுக்கும் ரகசிய வர்த்தக தொடர்பு இருக்கும் தகவல் வெளியானது.
சஞ்சய் பண்டாரி ஆயுத விற்பனையில் மோசடியில் ஈடுபட்டதால் அவரது நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது சஞ்சய் பண்டாரிக்கும், ராபர்ட் வதேராவுக்கும் இடையே இ-மெயில் மூலம் தகவல் பரிமாற்றங்கள் நடந்து இருப்பது தெரிய வந்தது.
அப்போது சஞ்சய் பண்டாரிக்கும், ராபர்ட் வதேராவுக்கும் இடையே இ-மெயில் மூலம் தகவல் பரிமாற்றங்கள் நடந்து இருப்பது தெரிய வந்தது.
ஒரு இ-மெயில் தகவலை ஆய்வு செய்ததில் சஞ்சய் பண்டாரி மூலம் ராபர்ட் வதேரா லண்டனில் ரூ.19 கோடி மதிப்புள்ள பங்களாவை 2009-ம் ஆண்டு வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
2010-ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த பங்களாவை ராபர்ட் வதேரா அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே சஞ்சய் பண்டாரி மூலம் ராபர்ட் வதேரா பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று வருமானவரித்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே சஞ்சய் பண்டாரி மூலம் ராபர்ட் வதேரா பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று வருமானவரித்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ராபர்ட் வதேரா மீதான இந்த புகார் குறித்து சோனியா காந்தி கருத்து தெரிவிக்கையில் ஆவேசம் அடைந்தார். ராபர்ட் வதேரா லண்டனில் சொத்து வாங்கியது குறித்து மத்திய அரசு பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என்று கேட்டார்.
இதற்கிடையே ராபர்ட் வதேரா லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்தை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சொந்தமான தீவுகளிலும், துபாயிலும் அவர் சொகுசு பங்களாக்கள், சொத்துக்கள் வாங்கி இருக்கலாம் என்று வருமான வரித்துறை ஆய்வில் சந்தேகம் எழுந்துள்ளது.
துபாயில் ராபர்ட் வதேரா 24 கோடியில் சொகுசு பங்களா வாங்கி இருக்கிறார். இதற்கும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தான் பணம் கொடுத்தாரா?
அல்லது எப்படி பணம் வந்தது என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
அல்லது எப்படி பணம் வந்தது என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
அவரிடம் நேற்றும், இன்றும் விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சஞ்சய் பண்டாரி தனக்கு உடல் நலம் சரி இல்லை என்று கூறி ஒரு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராபர்ட் வதேரா வாங்கி குவித்த சொத்துக்கள் பற்றிய விசாரணைக்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.