சிவிவி எண் பற்றி தெரிந்து கொள்ள ..?

இணையம் நம்முடைய வாழ்வை மிகவும் எளிதாக்கி விட்டது. வங்கி பரிவர்த்தனையை நீண்ட வரிசையில் நின்று முடித்த காலம் மலையேறிவிட்ட 

நிலையில் இன்று இணைய வழி வங்கி பரிவர்த்தனை என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.
நீங்கள் ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனை செய்கின்றீர்கள் எனில் உங்களுக்குக் கண்டிப்பாக அட்டை சரிபார்ப்பு எண் அதாவது சிவிவி எண் பற்றித் தெரிந்திருக்கும்.
 cvv - Card Verification Value
அட்டை சரிபார்ப்பு எண் அல்லது சிவிவி உங்களுடைய ஆன்லைன் பரிவர்த்தனையின் போது, உங்கள் அட்டையை மோசடிக்கு எதிராகப் பாதுகாக்க உதவுகிறது. 


நீங்கள் ஒரு ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடும் பொழுது உங்களுடைய அட்டை காலாவதியாகும் தேதி, பெயர் போன்ற அனைத்து விவரங்களையும் பூர்த்திச் செய்த பின் அந்த வணிக இணையதளம் சிவிவி-யை கேட்கும். 

நீங்கள் உங்கள் அட்டையின் பின்னால் இருக்கும் சிவிவி என்கின்ற ஒரு மூன்று இலக்க எண்ணைப் பார்க்க முடியும். அதை நீங்கள் யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது, அது தான் மிகவும் முக்கியம். எப்படி இந்தச் சிவிவி என்ணை கண்டுபிடிப்பது?

உங்களுடைய அட்டையைத் தலைகீழாகத் திருப்பினால் நீங்கள் ஒரு காந்த நாடாவை பார்க்க முடியும். இந்தக் காந்த நாடா மிகச் சாதாரணமாக உங்களுடைய தரவுகளைப் பெரிய அளவில் சேமித்து வைத்திருக்கும். 


உண்மையில் உங்களுடைய அட்டையில் காந்த நாடாவே மிகவும் முக்கியமானது. இதற்கப்பால் நீங்கள் தெளிவாகப் பல டிஜிட்டல் எண்களை, குறிப்பாக ஒரு மூன்று இழக்க எண்ணைக் காண முடியும். 

உண்மையில் அதுவே உங்களுடைய அட்டையின் சரிபார்ப்பு மதிப்பு எண் ஆகும். வெவ்வேறு நிறுவன அட்டைகளில் வெவ்வேறு சிவிவி எண்கள் இருக்கும். 

உதாரணமாக, மாஸ்டர்கார்டு மற்றும் விசா நிறுவன அட்டைகளில் மூன்று இலக்க சிவிவி எண்கள் காணப்படும். ஆனால் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவன அட்டையில் 4 இலக்க சிவிவி எண்கள் இருக்கும். 


இந்தச் சிவிவி எண்ணிற்குக் கீழே நீங்கள் அட்டையில் கையெழுத்து இடும் இடம் உள்ளது. சிவிவி எண்ணின் முக்கியத்துவம் என்ன? இது நீங்கள் ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் போது, உங்களுக்குச் சில கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை வழங்குகின்றது. 

உதாரணமாக, சிவிவி உள்ள இடத்தில் காந்த நாடா சேதமடைந்து விட்டது என்றால், உடனடியாக அது சேதமடைந்த அட்டை என்று வாசிக்கப்படும். எனினும், உங்களை மோசடிகளிலிருந்து எல்லா நேரமும் இந்த 3 இலக்க எண்ணினால் பாதுகாக்க முடியாது.

நீங்கள் உங்களுடைய சிவிவி குறித்த தகவல்களைப் பிறருக்குக் கொடுக்காமல் இருந்ததால் இந்த 3 இலக்க எண் உங்களுக்குக் கண்டிப்பாக உதவும். மறுபுறம் உங்களுடைய அட்டை தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ, இந்தச் சிவிவி எண்ணினால் ஒரு பயனும் இல்லை. 

அது உங்களுடைய அட்டையுடன் சேர்ந்து கண்டிப்பாகக் கொடியவர்களின் கைகளை அடையும் வாய்ப்பு அதிகம். நீங்கள் உங்களுடைய அட்டை சரிபார்ப்பு எண் பற்றிய விவரங்களைக் கண்டிப்பாக வெளிப்படுத்தகக் கூடாது. 

இது மிகவும் முக்கியமானது. அது உங்களை மோசடிகளிள் இருந்து கண்டிப்பாகப் பாதுகாக்கும். ஏனெனில் வரும் முன் காப்பதே மிகக் சிறந்த பாதுகாப்பாகும்.
Tags:
Privacy and cookie settings