டாக்சி ஓட்டுநர் தூங்கியதால் டாக்சியை ஓட்டிய பயணி !

குர்கானில் உபேர் டாக்சியை ஓட்டும்போதே ஓட்டுநர் தூங்கியதால் வேறு வழியில்லாமல் பயணியே வாகனத்தை ஓட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குர்கானில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் 23 வயதான இஷான் கில். அவர் கடந்த 15 ஆம் திகதி இரவு டெல்லியில் இருந்து குர்காவ்ன் செல்ல உபேர் ஆப் மூலம் டாக்சியை புக் செய்துள்ளார்.

ஒரு மணிநேரம் தாமதமாக வந்த டிரைவர் தூங்கி வழிந்துள்ளார். இது குறித்து இஷான் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, டிரைவர் அஜய் ஒரு மணிநேரம் தாமதமாக வந்தார்.

அவர் தூங்கி வழிந்தார். நீங்கள் நல்லாத் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஆம் என தலையாட்டினார். ஆரோபிந்தோ மார்க்கில் செல்கையில் செல்போனில் மெசேஜ் அனுப்புவதை 

நிறுத்திவிட்டு தலையை நிமிர்ந்து பார்த்தால் அஜய் காரை டிவைடர் மீது மோத விருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே காரே ஓரமாக நிறுத்துமாறு கூறினேன். இரவு 1.30 மணி ஆனதால் அவரால் வேறு டாக்சியை வரவழைக்க முடியவில்லை. அவரிடம் எனது ஓட்டுநர் உரிமத்தை காண்பித்து நான் வாகனத்தை ஓட்டுகிறேன் என்று கூறி ஓட்டினேன்.

டிரைவர் பயணி சீட்டில் தூங்கிவிட்டார். நான் சேரவேண்டிய இடத்தை அடைந்ததும் பணத்தை அவர் மடியில் போட்டுவிட்டு அவரை பார்த்துக் கொள்ளுமாறு அங்கிருந்த பாதுகாவலரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings