மாஸ்கோ; ரஷ்யாவில் தண்ணீருக்கு அடியில் சென்று பீரங்கி படைகள் கொண்டு ராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. அந்நாட்டின் தெற்கு ராணுவத்தை சேர்ந்த வீரர்கள்
கனரக படைப்பிரிவு வாகனங்களை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். தரையிலிருந்து கிளம்பிய பீரங்கி டேங்குகள் சரசரவென தண்ணீருக்குள் இறங்கி மீண்டும் தரைக்கு வந்தன.
மேலும் ராணுவ வாகனங்கள் படகில் ஏற்றப்பட்டு இயந்திரங்களின் உதவியுடன் அடுத்த தரைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்து பேசிய ராணுவ பயிற்சியாளர் கோலநில் என்பவர் இதன் மூலம் கனரக வாகனங்களை எப்படி இயக்குவது என
வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினார். அவர்கள் படைப்பிரிவிற்கு திரும்பும் போது இந்த பயிற்சிகள் பலனளிக்கும் என்ற அவர்,
பயிற்சியின் மூலம் ஆபத்து காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுவது எளிதாக இருக்கும் என்றார். எனவே தான் ரஷ்ய படை வீரர்களுக்கு அவப்போது இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.