பிரமிக்க வைத்த திருமணம் வைபவம் !

உலகிலுள்ள கோடிஸ்வரர்கள் தமது செல்வ செழிப்பை பல்வேறு வைபவங்கள் ஊடக வெளிப்படுத்துவர். அந்த வகையில் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில், 
உலகத்திலேயே அதிக செலவில் பிரமாண்ட திருமணம் நடந்துள்ளது. இத்திருமணத்திற்கான செலவு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ரஷ்ய கோடீஸ்வரர் சாமுவேல் கராப்தியன் தனது

இளையமகனுக்கு இவ்வளவு பெரிய செலவில் பிரமாண்டமாக திருமணத்தை செய்து வைத்துள்ளார். இவரது மகன் சர்கிஸ் கராப்தியன். பிரமாண்ட திருமணத்தின் மணமகன் இவர் தான். மணமகள் பெயர் சலோமி கிண்ட்சாராஸ்விலி. 

மாஸ்கோவில் உள்ள மிக பிரபலமான சபிஷா ரெஸ்டாரண்டில் தான் இந்த பிரமாண்ட திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணமகளுக்காக பிரத்யேகமாகவும், வித்தியாசமான தாகவும் 3 வகையான ஆடைகள் வடிவமைக்கப் பட்டிருந்தது. 
பிரபல ஆடை வடிவமைப்பாளரான அலெசாண்டரா ரிச் என்பவர் இவற்றை வடிவமைத்து இருந்தார். ஆடையின் மதிப்பு இரண்டு இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.
Tags:
Privacy and cookie settings