நம்முடைய மார்பகம் வளராதா அது வளர நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன உணவு உண்ணலாம்? அதற்காக என்ன உடற்பயிச்சி செய்யலாம் என்று யோசிக்கும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு பெண் என்ன பார்க்கிறீர்கள் மேலும் படியுங்கள்.
விளையாட்டு வீராங்கனைகளுக்கு எது மிகப் பெரிய அசவுகரியம் என்றால் அவர்களிடம் பல காரணங்கள் கிடைக்கும். ஆனால் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு
விளையாட்டு வீராங்கனைகளுக்கு எது மிகப் பெரிய அசவுகரியம் என்றால் அவர்களிடம் பல காரணங்கள் கிடைக்கும். ஆனால் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு
அவரது பெரிய மார்பகமே பெரும் சுமையாகி பெரும் வருத்தத்தையும், வேதனையையும் சந்தித்துள்ளார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா... அவருதான் சிமோனா ஹேலப். 22 வயது தான் ஆகிறது இந்த இளம் வீராங்கனைக்கு.
ஆனால் இவரது வயதையும் மீறிய வளர்ச்சியுடன் காணப்பட்ட மார்பகத்தால் சாதாரணமாக விளையாட முடியாமல் அவதிப்பட்டு வந்தார் சிமோனா. ஆனால் இப்போது அவரது சுமை நீங்கி மிகவும் இயல்பாக மாறியுள்ளார், வெற்றிகளையும் குவிக்க ஆரம்பித்துள்ளார்.
தனது பெரிய மார்பகங்களை அறுவைச் சிகிச்சை மூலம் சிறிதுபடுத்தியுள்ளார் சிமோனா. இனி தனது அடுத்த இலக்கு ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுதான் என்று உற்சாகமாக கூறுகிறார் சிமோனா.
சிமோனா, ருமேனியாவைச் சேர்ந்தவர். சிறந்த டென்னிஸ் வீராங்கனை. சிமோனாவின் டென்னிஸ் வளர்ச்சி படு வேகமானது. அந்த அளவுக்குத் திறமை படைத்த பெண்ணாக இவர் இருந்தார்.
தற்போது செரீனா வில்லியம்ஸுக்கு அடுத்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் சிமோனாவைப் பார்த்துப் பலரும் பிரமிக்கிறார்கள்.
காரணம், இளம் வயதிலேயே இவ்வளவு வேகமாக வளர்ந்த பிரபலமான ஒரு வீராங்கனை என்றால் அது ஸ்டெபி கிராப்தான். கிட்டத்தட்ட அவர் அளவுக்கு வேகமாக பிரபலமாகியுள்ளார் சிமோனா.
2012ம் ஆண்டு இவர் டாப் 50 வீராங்கனைகளில் ஒருவராக இருந்தார். 2013ல் டாப் 20க்குள் முன்னேறினார். 2014ல் டாப் 10க்குள் வந்தார். இப்போது 2வது நிலை வீராங்கனையாக உயர்ந்திருக்கிறார்.
ஸ்டெபி கிராப் போலவே இவரும் ஒரே காலண்டர் வருடத்தில் அடுத்தடுத்து 6 டபிள்யூடிஏ பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 1986ம் ஆண்டு ஸ்டெபி 7 பட்டங்களை வென்றிருந்தார்.
முதல் முறையாக இவர் இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அப்போட்டியில் மரியா ஷரபோவாவிடம் மோதினார். ஆனால் தோல்வியுற்றார்.
அதேபோல விம்பிள்டன் அரை இறுதிப் போட்டி வரை வந்தார். அங்கு யூஜெனி போச்சார்டிடம் தோல்வியுற்றார். சிமோனாவுக்கு சமீப காலத்திற்கு முன்பு வரை பெரும் சங்கடம் ஒன்று இருந்து வந்தது. அது அவரது பெரிய மார்புகள்.
அவரது வயதையும் மீறிய வகையில் இளம் வயதிலேயே அவருக்குப் பெரிய மார்புகள் இருந்தன. இதனால் அவர் மைதானங்களில் சுதந்திரமாகவும், இயல்பாகவும் ஆட முடியவில்லை. பெரும் அவதிப்பட்டார்.
தனது பெரிய மார்புகள்தான் தனது வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்த அவர் சற்றும் யோசிக்காமல் மார்பகக் குறைப்பு அறுவைச் சிகிச்சைக்கு சென்றார். தனது மார்பகங்களை கணிசமான அளவில் குறைத்து வயதுக்கேற்ற வகையில் அதை மாற்றியமைத்தார்.
அது அவருக்கு பெரும் தெம்பைக் கொடுத்தது. நம்பிக்கையை அதிகரித்தது. இப்போது முன்பை விட சுதந்திரமாக, உற்சாகமாக, இயல்பாக விளையாட முடிவதாக பெருத்த சந்தோஷத்துடன் கூறுகிறார் சிமோனா.
அடித்து ஆட முடிகிறது முன்பு போல தயக்கம் காட்டாமல் ஸ்டிரோக்குகளை சிறப்பாக அடிக்க முடிகிறது. மின்னல் வேகத்தில் ஓடியாட முடிகிறது. எந்தவிதமான வெட்கமும் இப்போது அவருக்கு இல்லை.
மிகுந்த இயல்புடன் ஆடுகிறார் சிமோனா என்று அவரது பயிற்சியாளர் விம் பிஸட் புகழ்கிறார். தனது மார்பகப் பிரச்சினை குறித்து சிமோனா கூறுகையில், நான் எனது பெரிய மார்புகளை வெறுக்கிறேன்.
விளையாட்டு வீராங்கனையாக இல்லாவிட்டாலும் கூட நான் இதைக் குறைத்திருப்பேன். இதை நான் விரும்பவில்லை. எனது வளர்ச்சியை இது தடுத்து வந்தது என்றார்.
தற்போது சிமோனாவின் ஒரே இலக்கு ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுதான். அதன் பின்னர் அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஒரு கை பார்த்து விடுவது என்ற வேகத்திலும் உள்ளாராம் சிமோனா.