சைக்கிள் திருடு போனதால் அவர் குத்து சண்டை வீரர் ஆனார்.. முகமது அலி !

முகமது அலிக்கு 12 வயது இருக்கையில் அவரது சைக்கிள் திருடுபோனதால் அவர் குத்துச்சண்டை வீரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அரிசோனா 
மாநிலத்தில் உள்ள லூயிஸ்வில்லியை சேர்ந்தவர் முகமது அலி(74). அவரது 12வது பிறந்தநாள் பரிசாக அவரது பெற்றோர் ஒரு சைக்கிளை பரிசளித்தனர்.

அலி அந்த சைக்கிளில் உள்ளூரில் நடந்த பொருட்காட்சிக்கு சென்றார். அங்கு யாரோ அவரது சைக்கிளை திருடி விட்டார்கள். இதனால் கடும் கோபம் அடைந்த அலி நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். 

ஜோ மார்டின் என்ற போலீஸ்காரரிடம் புகார் அளித்த அலி திருடன் மட்டும் தன் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்காமல் விட மாட்டேன் என்று கோபத்தில் கொந்தளித்தார். 

இதை கேட்ட மார்டின் அலியை பார்த்து மிரட்டல் விடுவதற்கு முன்பு முதலில் முறையாக குத்துச் சண்டை கற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

மேலும் மார்டினே அலிக்கு குத்துச் சண்டை கற்றும் கொடுத்தார். மார்டின் போலீஸ்காரர் மட்டும் அல்ல குத்துச் சண்டை பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்டினின் வழிகாட்டுதலின்படி அலி பல போட்டிகளில் வெற்றி பெற்றார். 

1960ம் ஆண்டில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட அலி தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்றபோது அவருக்கு வயது 18.
Tags:
Privacy and cookie settings