ரமலான் மாத நோன்பின் பலன்கள் !

ரமலான் நோன்பின் பலன்கள் பற்றி இறைவன் தனது திருமறையில் இரண்டாம் அத்தியாயம் 183ம் வசனத்தில் கூறியுள்ளார்.
அதாவது, "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" எனக் குறிப்பிடுகிறான்.

மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் போது தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என்று இறைவன் கூறும்போது, 

உண்ணாமல் இருக்கிறார்களே, இப்பயிற்சி பெற்றவர்களா பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே என்று இறைவன் சொல்லும்போது அதைச் செய்வார்கள்?

நோன்பு நோற்கும்போது மனைவியுடன் சேராதே என்று இறைவன் சொல்லும்போது அதனைச் செய்யாமல் இருக்கும் பயிற்சி பெற்றவர்களா, மற்ற பெண்கள் பக்கம் நெருங்காதே என்று இறைவன் சொல்லும் போது அதனை கேட்காமல் போவார்கள்? என்கிறது திருமறை.

மேலும், சொர்க்கத்தில் ரய்யான் என்ற வாசல் உண்டு. ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு நோற்றவர்கள் மட்டுமே இவ்வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள்.

ரமலானில் நோன்பு இருப்பதில் பெய்ய பயிற்சி, அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பயன் அளிக்குமானால் அந்தப் பயிற்சியினால் பலன் உண்டு. இல்லையெனில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறேதும் நன்மையில்லை.
Tags:
Privacy and cookie settings