தமிழ்நாட்டில் துவரம்பருப்பு விலை கிலோ ரூ.220 அளவுக்கு உயர்ந்தது. இதே விலை உயர்வு, நாட்டின் பிற மாநிலங்களிலும் நிலவியது. அதிகம் விளைகின்ற
பிற மாநிலங்களில் இருந்து பருப்பு வரத்து அதிகரித்து இருப்பதால் விலை கொஞ்சம் இறங்கி உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பருப்பு வகைகள் விலையை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க
ஏதுவாக பருப்பு வியாபாரிகள் 30 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்ய முடிவு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதுபற்றி இந்திய பருப்பு, தானியங்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பீமல் கோத்தாரி கூறும்போது, “கடந்த ஆண்டு 57 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டு 30 லட்சம் டன் பருப்பு இறக்குமதிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம்.
ஆகஸ்டு மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் இந்த பருப்பு வகைகள் வந்து சேரும். இந்த பருப்பு வகைகளில் துவரம் பருப்பு, பட்டாணி பருப்பு, வெள்ளை கொண்டை கடலை உள்ளிட்டவை அடங்கும்” என்றார்.
இதற்கிடையே இறக்குமதி செய்து, பதுக்குவதை தடுக்கிற விதத்தில் பருப்பு இறக்குமதி மத்திய புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.