உடலின் வெப்பநிலை ஆரோக்கியமான ஒருவருக்கு 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் சிறிது மாறுபடும்.
அதனால்தான் சிலரது உடல் கொஞ்சம் குளுமையாக இருப்பது போலவும் சிலரது உடல் அதிக வெப்பத்துடன் இருப்பது போலவும் தோன்றுகிறது.
மருத்துவ ரீதியாக இதுபோல ஒருவரது உடல் வெப்பநிலை சிறிது அதிகமாக இருப்பதாலோ, குறைவாக இருப்பதாலோ எந்த பிரச்னையும் இல்லை என்று கூறப்படுகிறது.
தைராய்டு குறைபாடு உள்ளவர் களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரிடம் தைராய்டு பரிசோத னையை செய்து கொண்டு, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
உடற் சூட்டைக் குறைக்கும் தர்பூசணி, மாதுளை, எலுமிச்சைப்பழம், இளநீர் போன்ற வற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்....