நடமாடும் உலகம் சாதனை படைத்த இந்தியர் !

இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக் கொண்டுள்ளார். மொத்த மாக 500 இற்கும் மேற்பட்ட உருவங்கள் இவரின் உடலில் பச்சை குத்தப் பட்டுள்ளன.
நடமாடும் உலகம் சாதனை படைத்த இந்தியர் !
74 வயதான பிரகாஷ் ரிஷி எனும் இவர், 20 சாதனை களைப் படைத்த தாக கூறு கிறார். தற்போது அவர் “கின்னஷ் ரிஷி” என்றே அழைக்கப் படுகின்றார்.

1942 ஆம் ஆண்டு புது டில்லியில் பிறந்த பிரகாஷ் ரிஷி, 1990 ஆம் ஆண்டு முதல் தடவையாக கின்னஸ் சாதனை நூலில் இடம் பெற்றார்.

அவர் தனது இரு நண்பர் களுடன் மோட்டார் ஸ்கூட்டர் ஒன்றில் 1001 மணித்தி யாலங்கள் பயணம் செய்தமை கின்னஸ் உலக சாதனை யாக பதிவு செய்யப் பட்டது.

பின்னர் புது டில்லியி லிருந்து அமெரிக்கா வின் சான் பிரான்ஸி ஸ்கோ நகருக்கு பீட்ஸா விநியோ கித்தமை, ஒரு போத்தல் தக்காளி சோஸை 4 நிமிடங் களுக்குள் உட்கொண்டமை என பல சாதனை களை அவர் படைத்தார்.

வாயில் அதிகம் உறிஞ்சும் குழாய் களை (ஸ்ட்ரோ) வைத்து சாதனை படைப்ப தற்காக இவர் தனது பற்கள் முழு வதையும் கழற்றிக் கொண்டு ள்ளமை குறிப்பிடத் தக்கது.
மகாத்மா காந்தி, 2 ஆம் எலிஸபெத் அரசி உட்பட பல பிரமு கர்களின் உருவங் களையும் இவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

கின்னஸ் ரிஷியின் மனைவி பிம்லா, உலகின் மிகச்சிறிய உயில் எழுதியமைக்காக கின்னஸ் சாதனை நூலில் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

1991 ஆம் ஆண்டு அனைத்தும் மகனுக்கே (All to son) என்பதே இந்த உயிலாகும்.
Tags:
Privacy and cookie settings