மனிதர்களை புத்திசாலியாக்கும் மோடபினில் மாத்திரை !

தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மோடபினில் (Modafinil) என்கிற மாத்திரை புத்திசாலித் தனத்தை தூண்டுவதற்கு உதவுவதாக தெரிவித் துள்ளனர். இதனை ஆராய்ச்சி யாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 
மோடபினில் மாத்திரை


நீண்ட நேரம் பணிபுரியும் காவல் துறையி னருக்கும், ராணுவ அதிகாரி களுக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்களால் 24 வெவ்வேறு துறைகளின் கீழ் சோதனை செய்யப் பட்டது.

இதில் திட்டமிடல், முடிவெடுப்பது, ஞாபக சக்தி, கற்றல் திறன் மற்றும் படைப் பாற்றல் போன்ற அறிவாற்றல் சம்பந்தப் பட்டவற்றில் மேம்பாடு ஏற்பட்டிருப்பது உறுதியாகி யுள்ளது. 

இந்த ஆராய்ச்சிக் குழுவில் பங்கு வகித்த அன்னா கேத்தரின் ப்ரெம், ‘இம்மாத்திரை யில் சில பக்க விளைவுகள் இருப்பினும் இது புத்திசாலித் தனத்தை மேம்படுத்த உதவுகின்றது’ எனக் குறிப் பிட்டுள்ளார். 
மோடபினில் மாத்திரை


ஆகவே, தூங்குவதில் குறைபாடு உள்ளவர் களுக்கும், தேர்வுக்கு தயாராகும் மாணவர் களுக்கும் இந்த மாத்திரை உதவும் என்பது இந்த ஆய்வின் மூலமாக தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் சில நிறுவனங் களால் விற்கப்படும் இந்த மாத்திரைகள், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைப்படி விற்பனை செய்யப் படுகின்றன.

மேலும் இம்மாத்திரைக்கு எந்த ஒரு நாட்டிலும் தடை விதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings