இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்க ளையும், 93 படகுகளையும் மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''இலங்கை கடற்படை யினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவம் கட்டுப் படுத்தப்பட வில்லை.
தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து விசைப்படகில் 3 மீனவர் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களை, இலங்கை கடற்படை யினர் 15-ம் தேதி நள்ளிரவில் கைது செய்து இலங்கை யின் காங்கேசன் துறைக்கு கொண்டு சென்று ள்ளனர். பாக் நீரிணை பகுதியில்,
தங்கள் பாரம்பரிய பகுதியில் தமிழக மீனவர்கள் வாழ்வாதார த்துக்காக மீன்பிடித்து வருகின்றனர். இவர்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று உரிமையை இலங்கை அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர்.
கடந்த 1974 மற்றும் 76-ம் ஆண்டு களில், கச்சத்தீவை தாரை வார்ப்பது தொடர்பாக இந்தியா- இலங்கை இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
அரசியல் சட்டத்துக்கு எதிரான இந்த ஒப்பந்தமே இப்பிரச் சினைக்கு முக்கிய காரணம். இந்த ஒப்பந்த ங்களை எதிர்த்து, நான் உச்ச நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இதில் தமிழக அரசும் தன்னை இணைத் துள்ளது. இந்த வழக்கு தற்போதும் நிலுவை யில் உள்ளது. இதைவிட, இலங்கை அரசு பறிமுதல் செய்த படகுகளை நீண்ட காலமாக விடுவிக்க மறுப்பது, வேதனைக் குரியதாகும்.
நீண்ட காலமாக படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங் களை பயன் படுத்தாமல் வைத்திருப்ப தால், அவற்றை தொடர்ந்து மீன்பிடி தொழிலுக்கு பயன் படுத்த முடியாமல் போய் விடும்.
இது மீனவர் களுககு மிகப்பெரிய இழப்பாகும். எனவே, தமிழக மீனவர் களின் வாழ்வாதார விவகார த்தில், நிலையான மற்றும் நடை முறைக்கேற்ற தீர்வை மத்திய அரசு காண வேண்டும்.
மேலும், இந்த விவ காரத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, 24 மீனவர்கள் மற்றும் 93 படகுகளை உடனடி யாக விடுவிக்க, வெளியுறவுத் துறை அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித் துள்ளார்.