பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நேற்று வெளி யிடப்பட்டது. இதில், 9 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப் புக்கு சுமார் 1.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 20-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப் பட்டது.
இதைத் தொடர்ந்து, தர வரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழ கத்தில் நேற்று நடந்தது.
இதில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு தரவரிசை பட்டியலையும், 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
பொதுப் பிரிவில் ஏ.அபூர்வா தர்ஷினி (கேரளா), வி.விக்னேஷ், (தஞ்சாவூர்), என். பரதன் (நெய்வேலி), ஆர்.ரக் ஷனா (விசாகப்பட்டினம்), எஸ். சிவராம் ருத்விக் (தாராபுரம்),
கே.எம்.ஹர்ஷிதா (வேலூர்), ஷேக் அப்துல் சமீர் (நெல்லூர்) ஆகிய 7 பேரும், தொழிற்கல்வி பிரிவில் எஸ்.ரோஹிந்த் போஸ் (திண்டுக்கல்), எம்.டி.நிவேதா (ஆரணி) ஆகிய 2 பேரும் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 994 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 3 ஆயிரத்து 812 பேரின் விண்ணப்பங் கள் குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 571 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 9 பி.இ., பி.டெக். இடங் கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
தரவரிசைப் பட்டியலில் பொதுப்பிரிவில் (அகா டமிக்) மாணவி ஏ.அபூர்வா தர்ஷி னியும், தொழிற்கல்வி பிரிவில் மாணவர் எஸ்.ரோஹிந்த் போஸும் முதலிடத்தை பிடித்துள் ளனர்.
விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு 24-ம் தேதியும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 25-ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. அதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது.
கலந்தாய்வுக்கு தாய் அல்லது சகோதரியுடன் வரும் மாணவிகளுக்கு மட்டும் முந்தைய நாள் இரவு தங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.
தரவரிசைப் பட்டியல் வெளி யிடும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலாளர் ஏ.கார்த்திக், மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ். கணேசன்,
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி, அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை இயக் குநர் ஜி.நாகராஜன், நுழைவுத் தேர்வு இயக்குநர் பி.மல்லிகா, கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி.நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாருக்கு, எப்போது கலந்தாய்வு?
எந்தெந்த கட் ஆப் மதிப் பெண்ணுக்கு எப்போது, எந்த நேரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்ற பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இதன்மூலம், பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்துள்ள மாணவர்கள் தங்களுக் கான கலந்தாய்வு நாள், நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள லாம். கலந்தாய்வுக்கான அழைப் புக் கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது.
மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது.