அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார்.
முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி 500 டாஸ்மாக் கடைகள் தேர்வு செய்யப்பட்டு அந்த கடைகள் நாளை முதல் மூடப்பட உள்ளன. இதற்கான அரசாணையை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை மண்டலத்தில் 58 கடைகள் மூடப்பட உள்ளன. கோவையில் 60 கடைகளும், மதுரையில் 201 கடைகளும், திருச்சியில் 133 கடைகளும், சேலத்தில் 48 கடைகளும் மூடப்பட உள்ளன.
ஒவ்வொரு மண்டலத்திலும் மாவட்ட வாரியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகள் விவரம் வருமாறு:-
சென்னை மண்டலம்:
சென்னை வடக்கு - 2
சென்னை மத்தி - 3
சென்னை தெற்கு - 2
காஞ்சிபுரம் வடக்கு - 13
காஞ்சிபுரம் தெற்கு - 3v
திருவள்ளூர் கிழக்கு - 16
திருவள்ளூர் மேற்கு - 19
கோவை மண்டலம்:
கோவை வடக்கு - 1
கோவை தெற்கு - 4
திருப்பூர் - 8
ஈரோடு - 16
நீலகிரி - 31
மதுரை மண்டலம்:
மதுரை தெற்கு - 21
மதுரை வடக்கு - 16
திண்டுக்கல் - 10
ராமநாதபுரம் - 36
விருதுநகர் - 27
சிவகங்கை - 43
திருநெல்வேலி - 9
தூத்துக்குடி - 30
கன்னியாகுமரி - 6
தேனி - 3
திருச்சி மண்டலம்:
திருச்சி - 14
நாகப்பட்டினம் - 16
தஞ்சாவூர் - 16
புதுக்கோட்டை - 14
கடலூர் - 15
கரூர் - 14
திருவாரூர் - 8
விழுப்புரம் - 29
பெரம்பலூர் - 7
சேலம் மண்டலம்:
தர்மபுரி - 1
கிருஷ்ணகிரி - 6
நாமக்கல் - 11
வேலூர் - 8
திருவண்ணாமலை - 18
அரக்கோணம் - 4.