அம்மா குடிநீருக்கு போட்டி.. ரயில் நிலையங்களில் 1 லிட் 5 ரூபாய் !

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பேருந்து நிலையங்களில் ரூ.10க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்து வருகிறது. 
இதே போல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ரூ.5க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்ய உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

முதற்கட்டமாக மலிவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீர் ரயில் பயணிகளுக்கு கிடைப்பதற்கு ஏற்றவாறு புதிய தண்ணீர் இயந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிநீரை, ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் ரூ.5க்கு விற்பனை செய்துவரும் திட்டத்தை, அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

ரயில் பயணத்தின் போது குடிநீரை, ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களிலோ அல்லது கடைகளில் அதிக விலை கொடுத்தோதான் பெற வேண்டிய நிலை இருக்கிறது. 

ரயில்வே நிர்வாகம் விற்பனை செய்துவரும் ரயில் நீரின் விலை ஒரு லிட்டர் 15 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது தனியார் நிறுவன குடிநீரின் விலைக்கு இணையாகவே இருக்கிறது. 

இந்த நிலையில், மலிவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீர் ரயில் பயணிகளுக்கு கிடைப்பதற்கு ஏற்றவாறு புதிய தண்ணீர் இயந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. 

இந்த திட்டத்தை அனைத்து ரயில் நிலையங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்காக 7000 தண்ணீர் இயந்திரங்களை அமைக்க ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. 

மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 7 தண்ணீர் இயந்திரமும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 தண்ணீர் இயந்திரமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings