இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சுயாட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாண அரசுகளுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளன.
இதன் அடிப்படியில், சுவிஸில் உள்ள டிசினோ மாகாணம் ‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்வது தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.