உத்தராகண்ட் மாநிலத்தில் பிதோரகர் மற்றும் சமோலி மாவட்டங்களில் நேற்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பேய் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் பிதோ ரகர் மாவட்டம் சிங்காலி பகுதி யில் நேற்று காலை மேக வெடிப்பு காரணமாக பேய் மழை கொட் டியது. 50 சதுர கி.மீ. பரப்பளவுக்கு 2 மணி நேரத்தில் 100 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், 7-க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டும், வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கியும் சுமார் 30 பேர் பலியாகியுள்ளனர்.
சமோலி பகுதியில் சில கிராமங்களில் வீடுகள் இடிந்து மக்கள் இடிபாடு களில் சிக்கியுள்ளனர். பிதோர கர் மாவட்டத்தில் 8 பேரும், சமோலியில் 4 பேரும் பலியா கியுள்ளனர்.
சிரான் கிராமத்தில் 2 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப் பட்டு உயிரிழந்தனர். வெள்ளம், இடிபாடுகளில் சிக் கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள் ளனர்.
சிங்காலி பகுதியில் 7 கிராமங் களில் 25 பேரின் நிலை என்ன வானது எனத் தெரியவில்லை. அவர்களை இந்தோ திபெத், எல்லை ஆயுதப் படை, மாநில காவல் துறையினர் இணைந்து தேடி வருகின்றனர்.
பேரிடர் மேலாண்மை அதிகா ரிகளின் தகவல்படி, சிங்காலி, பத்தாகோட், ஓக்லா, தல் ஆகிய கிராமங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் இடிந்து விழுந்ததில் ஏராளமா னோர் இடிபாடுகளில் சிக்கி யிருக்கக் கூடும் என அஞ்சப்ப டுகிறது.
அலக்நந்தாவின் துணை நதி க ளான நந்தபிரயாகை, மந்தாகினி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில வீடுகள் ஆற்றில் அடித்துச் செல் லப்பட்டன. மேலும் சில வீடுகள் அபாய நிலையில் உள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை (என்டிஆர்எப்) மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் முதல்வர் ஹரீஷ் ராவத்திடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கனமழைக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் துள்ளனர். டேராடூன் வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் வெளி யிட்ட அறிக்கையில,
உத்தரா கண்டின் சில பகுதிகளில் குறிப்பாக நைனிடால், உதம்சிங் நகர், சம்பவத் மாவட்டங்களில் அடுத்த 72 மணி நேரம் பேய் மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இழப்பீடு
டெல்லியில் உள்ள உத்தரா கண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
மேக வெடிப்பு என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரை மணி நேரத்தில் 5 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை குடத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதுபோல பேய் மழை கொட்டினால் அது மேக வெடிப்பு என்று அழைக்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோடை காலத்தில் இடிமேகங்கள் உருவாகும். அந்த நேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மேக வெடிப்பு ஏற்படும். ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இமயமலை அருகே இருப்பதால் அங்கே அடிக்கடி இடிமேகங்கள் உருவாகும்.
தமிழ்நாட்டில் இதுவரை அதுபோல நடந்ததில்லை. உதாரணமாக இரும்பை நெருப்பில் பழுக்க காய்ச்சி, வாளியில் உள்ள தண்ணீரில் வைத்தால், வேகமாக புகை வெளியேறும். வெப்பத்தில் தண்ணீர் சூடாகி, நீராவியாக வெளியேறும்.
இதுபோலத்தான் தரையில் இருந்து 5 அல்லது 10 கிலோ மீட்டர் உயரத்தில் வானில் இடிமேகங்கள் உருவாகும் போது சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
மேகவெடிப்பு போன்ற அசாதாரணமான சூழல் உருவாகி குடத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதுபோல பேய் மழை கொட்டும்.