ப்ளே ஸ்டோரில், கேம்கள் ஏதாவது பணம் கட்டுங்கள் என்றால் அதனை விட்டு விட்டு இலவச கேம்களை பர்சேஸ் செய்பவர்கள் மத்தியில், இங்கிலாந்தின் சஸெக்ஸ் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன்,
தனது தந்தையின் ஆப்பிள் ஐபேடில், ஜூராஸிக் பார்க் கேமை அவருக்கு தெரியாமல் டவுன்லோட் செய்துள்ளான். அதற்காக 3911 பவுண்ட் செலவு செய்துள்ளான்.
சிறுவனின் தந்தை முகமது ஸுஹா அலுவலகத்தில் இருக்கும் போது, தனது வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளதாக வந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
தனது கணக்கை செக் செய்த போது, அதில் ஜூராஸிக் பார்க் கேமில் விதவிதமான டைனோசர்களை வாங்கியதாக கூறி,
அவரது கணக்கில் இருந்து 3911 பவுண்ட், இந்திய ரூபாயில் சுமார் 4 லட்ச ரூபாய், டெபிட் செய்யப்பட்டது தெரியவந்தது.
50 விதமான டைனோசர்களை வாங்கியுள்ள சிறுவனுக்கு, தனது தந்தையின் பாஸ்வேர்டு தெரியும் என்பதால் ஈஸியாக அனைத்தையும் வாங்கியுள்ளான்.
அதில் மொத்தம் 6 லட்சம் ரூபாய் வரை வாங்க முடியுமாம். 'இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால், மொத்தமாக 6 லட்சம் ரூபாயையும் செலவழித்திருப்பான் எனது மகன்' என்று அலறுகிறார் தந்தை.
இது தொடர்பாக ஆப்பிளிடம் முறையிட்ட சிறுவனின் தந்தை, ' நான் என் இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க போகிறேன்.
இதை ஏன் என் எனக்கு அறிவுறுத்தவில்லை?' என்றதற்கு ஆப்பிள், 'உங்கள் போனில் பாதுகாப்பு வசதிகளை அளித்துள்ளோம். அதனை நீங்கள் பயன்படுத்தவில்லை' என கூலாக தெரிவித்துள்ளது.
இறுதியில் 4 லட்சம் ரூபாய் போனது தான் மிச்சம். இது போன்று குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போது கட்டாயம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் இதோ....
1. பாஸ்வேர்டுகளை சேமித்தோ, உங்கள் குழந்தைகளுக்கு தெரியும் படியோ வைக்காதீர்கள்.
2. குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போது ஏரோ ப்ளேன் மோட், கிட்ஸ் மோட் ஆகியவற்றில் கொடுங்கள்.
3. செல்போனில் பர்சேஸ் ஆப்ஷனை மறைத்து வையுங்கள்.
4. ஆப் லாக்கர்களை பயன்படுத்தி, பணம் செலவழிக்கும் விஷயங்களுக்கு உங்கள் அனுமதி கேட்குமாறு செட் செய்து வைத்து கொள்ளுங்கள்.
5. குழந்தைகள் அடம் பிடித்தால் ஆஃப் லைன் கேம்களை விளையாட அனுமதியுங்கள்.