வேலையை விட்டா 5000 டாலர் தர்றோம்.. அமேசான் !

அமேசான் நிறுவனம் ஆண்டு தோறும் தனது ஊழியர்களுக்கு ஒரு ஆஃபரை முன் வைக்கிறது. அதன் படி நிறுவனம் 5000 டாலர் பணம் தரும். 
வேலையை விட்டா 5000 டாலர் தர்றோம்.. அமேசான் !
அதை பெற்றுக் கொண்டு வேலையை விட்டு போக விரும்புவோர் போய் விடலாம். இந்த ஆஃபரை பெற்றுக் கொண்டு பலர் ஆண்டு தோறும் விலகியும் வருகிறார்களாம்.

தனது விநியோக அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த ஆஃபரை ஆண்டு தோறும் அமல்படுத்தி வருகிறது அமேசான். இதற்கான காரணம் வித்தியாசமானது.

அதாவது வேலையில் திருப்தி இல்லாத, வேலையை சரியாக செய்ய இயலாத ஊழியர்கள் இந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களாகவே விலகிப் போய் விட இது வழி வகுக்கிறதாம்.

தங்களது திறமை மீது நம்பிக்கை உள்ள, உண்மையிலேயே திறமையாக செயல்படக் கூடிய ஊழியர்கள் இந்த ஆஃபரை நிராகரித்து விட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்களாம்.

இந்த திட்டத்தை அமல்படுத்தியவர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜெப் பெஸோஸ். அவர் கொண்டு வந்த பல வினோதமான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்கிறார்கள்.
அதை விட முக்கியமாக இந்தத் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்து கிறார்கள். ஒரு ஊழியர் வேலையில் சேர்ந்த முதலாவது வருட நிறைவில் அவரிடம் ஒரு கவர் தரப்படும். 

அதில் "Please Don't Take This Offer" என்று எழுதப் பட்டிருக்கும். கவருக்குள் 2000 டாலர் தருகிறோம். நீங்கள் வேலையை விட்டு விலகி விடலாம் என்ற ஆஃபர் அறிவிப்பு இடம் பெற்றிருக்கும்.

அதை நிராகரித்து விட்டு அவர் வேலையில் தொடர்ந்தால் வருடா வருடம் அவருக்கான தொகை 1000 டாலராக அதிகரிக்கும். கடைசியாக 5000 டாலர் ஆஃபர் கடிதம் அவருக்கு வரும். 

அதையும் ஏற்காமல் அதேசமயம், நிறுவனத்திற்குத் திருப்தி இல்லாத நிலையும் தொடர்ந்தால் நிறுவனமே அவரை டிஸ்மிஸ் செய்து விடும்.

நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் அவர்களுக்கும், நிறுவனத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் விலகி விடுவது தான் அவர்களுக்கும் 
நல்லது நிறுவனத்திற்கும் நல்லது என்று கூறுகிறார் பெஸோஸ். அமேசான் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1.17 லட்சம் ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதில் ஆண்டு தோறும் 2 முதல் 3 சதவீத ஊழியர்கள் இந்த டாலர் ஆஃபரை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகின்றனர் என்பதும் முக்கியமானது.
Tags:
Privacy and cookie settings