சவுதி அரேபியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஷேக் வாலிட் ஜூபாலி (61). இவரது மனைவி கிறிஸ்டினா எஸ்ட்ராடா (54). அமெரிக்காவை சேர்ந்த இவர் முன்னாள் மாடல் அழகி.
இந்த நிலையில் கோடீஸ்வரர் ஷேக் வாலிட் தனது மனைவி கிறிஸ்டினாவை கடந்த 2012-ம் ஆண்டு இஸ்லாமிய முறைப்படி அவருக்கு தெரியாமல் விவாகரத்து செய்தார்.
பின்னர் லெபனானை சேர்ந்த மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் அதை தொடர்ந்து ஷேக் வாலிட்டிடம் இருந்து கிறிஸ்டினா இங்கிலாந்தில் உள்ள லண்டன் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
அதல் கணவர் தனக்கு ரூ.1960 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்என கூறி இருந்தார். அவற்றில் லண்டனில் வீடு வாங்க 600 கோடி ரூபாயும்,
தேம்ஸ் நதிகரையில் ஹென்லியில் ஒரு சிறிய வீடு வாங்க ரூ-44 கோடியும் விலை உயர்ந்த 5 கார்கள் வாங்க ரூ-4 கோடியே 95 லட்சமும்,
உடைகள் வாங்க ஆண்டுக்கு ரூ-40 லட்சமும், கம்பளி ஆடைகள் வாங்க ஆண்டுக்கு ரூ-1 கோடியே 95 லட்சமும் ஷீக்கள் வாங்க ரூ-21 லட்சமும் வழங்கவேண்டும் என வரிசைப் படுத்தியிருந்தார்.
அவரது வழக்கை விசாரித்த கோர்ட் முன்னாள் மாடல் அழகி கிறிஸ்டினாவுக்கு ரூ.530 கோடி ஜீவனாம்சம் வழங்க உத்தர விட்டது.