அம்பா சமுத்திரத்தில் 5 பேரை வெட்டிய இளைஞர் !

அம்பா சமுத்திரத்தில் மனைவி, குழந்தைகள், மாமியார், மாமனார் என, 5 பேரை வெட்டிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அம்பா சமுத்திரத்தில் 5 பேரை வெட்டிய இளைஞர் !
அம்பா சமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமுகுட்டி (33). இவரது மனைவி ராஜம் (25). இவர்க ளுக்கு இஷ்யா(5), நாகேஸ்வரி (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். 

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராஜம் குழந்தை களுடன் அம்பா சமுத்திரம் மேலப் பாளையம் தெருவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை மாமனார் வீட்டுக்கு வந்த பிரமுகுட்டி, அரிவாளால் ராஜம், மாமியார் முத்து லெட்சுமி, மாமனார் சுந்தரசேகர் மற்றும் குழந்தை களை வெட்டியுள்ளார். 
5 பேரும் பாளையங் கோட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings