ஷூ வாங்கித் தருவதாக கூறி 6 வயது மகளை ஆற்றில் வீசிய தந்தை !

மும்பை அருகே தானே மாவட்டத்தைச் சேர்ந்த வர்தாக் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமி ஏக்தா துள்சிராம் சியானி (6).
ஷூ வாங்கித் தருவதாக கூறி 6 வயது மகளை ஆற்றில் வீசிய தந்தை !
கடந்த புதன் கிழமையன்று, இச்சிறுமியை அவரின் தந்தையும், நண்பர் ஒருவரும் சேர்ந்து, வெளியே அழைத்து வந்துள்ளனர்.

சியானிக்கு பிடித்த ஷூ வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள் வெளியே அழைத்து வந்தனர்.

ஆனால், திடீரென வழியில் பத்லாபூர் பகுதியில் உள்ள வாலிவ்லி பாலத்தில் இருந்து, உல்லாஸ் நதியில் சியானியை தூக்கி வீசி விட்டனர்.

கதறிக் கொண்டே ஆற்றில் விழப்போன சியானி, கையில் அகப்பட்ட ஏதோவொரு மரக்கிளையை பிடித்துக் கொண்டு தொங்கினாள். 

இரவு நேரம் நெருங்கிய நிலையில், 10 மணி நேரத்துக்கும் மேலாக சியானி அதே நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.

அப்போது, அருகில் உள்ள மோகன் குரூப் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் காவலாளி ரமேஷ் (35) சியானியின் அபயக்குரல் கேட்டு, பாலத்தின் அருகே வந்து பார்த்துள்ளார்.
சியானி உயிருக்கு போராடுவதைக் கண்டு, போலீஸ் மற்றும் தீயணைப் புத் துறைக்கு தகவல் அளித்தார். புதன் கிழமை மாலை தூக்கி வீசப்பட்ட சியானியை வியாழக் கிழமை காலை 6 மணிக்கு காவலாளி ரமேஷ் பார்த்துள்ளார். 

அடுத்த 15 நிமிடத்தில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். காலை 6.40 மணிக்கு சியானியை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இவ்விவகாரம் குறித்து, வர்தாக் நகர் காவல்நிலைய மூத்த ஆய்வாளர் கே.ஜி.கேவிட் கூறும் போது, சியானியின் தாய் அளித்த புகாரின்படி கடத்தல் வழக்கு பதிவு செய்தோம். 
மறுநாள் காலை ஆற்றில் சிறுமி மீட்கப் பட்டதாக தகவல் தெரிந்தது. உடனடியாக சியானியின் தாயை வரவழைத்து உறுதி செய்தோம். மாயமான தந்தையை தேடி வருகிறோம் என்றார்.
Tags:
Privacy and cookie settings