84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம் செய்த விஜய் டிவி ஓனர் !

ஊடக உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராபர்ட் முர்டோச், தனது 84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது ராபர்ட்டிற்கு நான்காவது திருமணம் ஆகும்.
84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம் செய்த விஜய் டிவி ஓனர் !
ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கராக வாழ்பவர் ராபர்ட் முர்டோச். பரம்பரை தொழிலே பத்திரிகையாகக் கொண்ட இவர், 

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் முடிசூடா மன்னனாக விளங்குகிறார்.

தலைமைப் பொறுப்பு…

தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தவர் முர்டோச்.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தனது பத்திரிகையை இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு அவர் விரிவு படுத்தினார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு…
அதிரடிச் செய்திகள் மூலம் அவரது பத்திரிகைகள் பிரபலமானது என்று கூறினால் மிகையில்லை. குறிப்பாக இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தினர், 

பிரபல நடிகர் – நடிகைகள், ராணுவ வீரர்கள் என பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்டு வெளியிட்டது இவரது நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை.

சொத்து மதிப்பு அதிகரிப்பு…

அது மட்டுமின்றி உலகில் பிரபலமாக விளங்கிய பல்வேறு ஊடகங்களை விலை கொடுத்து வாங்கினார் முர்டோச். 

நம்ம விஜய் விஜய் டிவியின் உரிமையாளரும் இவரே. இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

77 வது பணக்காரர்…

கடந்தாண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கணக்குப்படி, முர்டாக்கின் சொத்து மதிப்பு 74 ஆயிரத்து 810 கோடி ரூபாய் ஆகும். உலகின் 77வது பணக்காரராக முர்டோச் இருக்கிறார்.

முடிசூடா மன்னர்…

தனது 22 வயதில் ஊடகத் துறையில் நுழைந்த முர்டோச், தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 

இது தவிர பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அவர் உரிமையாளர் ஆவார்.

சொந்த வாழ்க்கையில்…
ஊடக வாழ்க்கையைப் போலவே அவரது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்து மாற்றங்கள். 

ஆனால் வெற்றிக்கு பதிலாக சொந்த வாழ்க்கையில், நடைபெற்ற மூன்று திருமணங்களும் முர்டோச்சிற்கு தோல்வியையேத் தந்தன.

முதல் திருமணம்…

கடந்த 1956ம் ஆண்டு முதலில் விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார் முர்டோச். ஆனால், 1967ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். 

பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட முர்டோச், 1999ம் ஆண்டு அவரையும் பிரிந்தார்.

மூன்றாவது திருமணம்…

மூன்றாவதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, கடந்த 2013ம் ஆண்டு அவரையும் பிரிந்தார்.

மாடலுடன் காதல்…

அதனைத் தொடர்ந்து 59 வயது ஜெர்ரி ஹால் என்ற மாடலுடன் காதலில் விழுந்தார் முர்டோச். இவர் நடிகையும் கூட. அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெர்ரி ஹாலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

டும்.. டும்… டும்…
இந்நிலையில், இவர்களது திருமணம் லண்டனில் பிளீட் தெருவில் உள்ள செயின்ட் பிரைட்ஸ் தேவாலயத்தில் சனிக்கிழமையன்று நடந்தது. 

இந்த திருமண நிகழ்ச்சியில் முர்டோச்சின் 3 மனைவிகளின் 4 மகள்களும், ஜெர்ரியின் முதல் கணவருக்கு பிறந்த 2 மகன்களும் கலந்து கொண்டனர்.

குழந்தைகள்…

முன்னதாக நடந்த மூன்று திருமணங்கள் மூலம் முர்டோச்சிற்கு 6 குழந்தைகளும், ஜெர்ரிக்கு 3 மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings