புனேவின் பாலேவாடி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 9 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இவ்விபத்து தொடர்பாக புனே துணை கமிஷ்னர் டெலி கூறியதாவது:
புனேவின் பலேவாடி பகுதியில் இன்று காலை 11மணியளவில் ’ப்ரைட் எக்ஸ்பிரஸ்’ என்ற அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில் அக்கட்டிடத்தின் 13வது மாடியில் கட்டுமானப் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் சிக்கி கொண்டனர்.
தகவல் அறிந்ததும் அவ்விடத்திற்கு விரைந்த வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்பதற்கும், மீட்புப் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றன
மேலும், விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று புனே துணை கமிஷ்னர் டெலி கூறினார்.