பிரபுதேவா நடிப்பில் தேவி செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது !

1 minute read
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் 'தேவி' திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
பிரபுதேவா நடிப்பில் தேவி செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது !
பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவி'. இயக்குநர் விஜய் இயக்கி வரும் இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், தற்போது இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இது குறித்து இயக்குநர் விஜய் "தேவி' படத்தை மேலும் மெருகேற்றும் 

அனைத்து இறுதிக்கட்ட வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மும்மொழி திரைப்படத்தை ஒரே நாளில் வெளியிடுவது என்பது சற்று கடினமான காரியம் தான்.
இருந்தாலும் எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒற்றுமையால் அதை நாங்கள் வெகு சிறப்பாக செய்து வருகிறோம். 

இந்த வருடத்தின் சிறப்பான நாளான 9.9.2016 அன்று 'தேவி' படத்தை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
Tags:
Today | 27, January 2025
Privacy and cookie settings